• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

KCL Expresso : Intelligence Speaks - “Effects of Artificial Intelligence (AI) an Society (சமுதாயத்தில் செயற்க்கை நுண்ணறிவின் தாக்கம் )

பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 01.08.2024 வியாழக்கிழமை அன்று “Effects of Artificial Intelligence (AI) an Society (சமுதாயத்தில்  செயற்க்கை நுண்ணறிவின் தாக்கம் )என்ற தலைப்பில்  Dr.C. Daisey, Profosser and Head,Thiagarajar College of Engineering, Madurai அவர்களின் உரையானது பல்வகை பண்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு  நடைபெற்றது






இலவச கண் பரிசோதனை முகாம் - 25.07.2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், 25.07.2024 வியாழன் அன்று காலை 10.00  மணி முதல் 5.00 மணி வரை, கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மேக்ஸி  விஷன் கண் மருத்துவமனை   இணைந்து நடத்தும்   இலவச  கண்  பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் நூலக வாசகர்கள் கண்களை பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.








" குழந்தைகளுக்கான அஃறிணை அறிவோம் " - திரு . பு. இரா. விஸ்வநாத் - 28.07.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

லைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (28.07.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு . பு. இரா. விஸ்வநாத் அவர்களின் " அஃறிணை அறிவோம்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு  பு. இரா. விஸ்வநாத் அவர்கள்,நாய் மற்றும் பாம்பு  கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள் , ஊர்வனம் மற்றும் வீட்டு விலங்குகளோடு  இணக்கமாக வாழும் கலை குறித்தும்  ,ஊர்வனம் விலங்குகளை துன்புறுத்துவதை தவிர்த்து அவற்றை  பாதுகாக்க வேண்டியதன்  அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார் . இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு ஊர்வனம் விலங்குகளை   பாதுகாப்பது மற்றும்  அதன் நன்மைகள் குறித்தும் அறிந்துகொள்ளும்  வாய்ப்பாக அமைந்தது  .இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.












CHESS @ KCL" - சதுரங்க பயிற்சி | சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று ( 27.07.2024 ) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு. உமாசங்கர் அவர்களின் "CHESS @ KCL" என்ற சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சியின் ஆறாவது   நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . திரு. உமாசங்கர் அவர்கள் சதுரங்கத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும்  சிறந்த நுணுக்கங்களை  மிக தெளிவாக எளிய செயல்விளக்கங்களுடன் சிறுவர்களுக்கு சதுரங்கம் கற்றுக்கொடுத்தார் . குழந்தைகளும் ஆர்வத்தோடு திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . நன்றி ...






"QUEEN OF KATWE " - திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 27.07.2024, சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (27.07.2024 )சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான  "QUEEN OF KATWE  " என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர், அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ...












பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்ற கலந்துரையாடல் நிகழ்வு வருகின்ற (27.07.2024) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்ற கலந்துரையாடல் நிகழ்வு  (27.07.2024) சனிக்கிழமை அன்று  காலை  11.00 மணியளவில்  தரைத்தளத்தில் உள்ள பல்வகைப்  பயன்பாட்டு அரங்கத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


                             


                                  

                











"முத்தமிழ் முற்றம்" ( மதுரையும் கலைஞரும் ) - திரு. தேவராஜ் அதிசயராஜ் | 26.07.2024, மாலை 5.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற முத்தமிழ் முற்றம் நிகழ்வில் "மதுரையும் கலைஞரும்" என்ற தலைப்பில் திருமிகு தேவராஜ் அதிசயராஜ்‌ அவர்கள் இனிய உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்று முடிந்தது.மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி

                            



" நிலவொளியில் " - இலக்கியம் மற்றும் அதை சார்ந்த கலந்துரையாடல்கள் | 21.07.2024 , 6.30 PM

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற நிலவொளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் ஆர்வலர்கள் தங்களது படைப்புகளான கவிதைகள் , கதைகள் தாங்கள் கற்று உணர்ந்த புத்தகங்களைப் பற்றிய கருத்துக்கள் மற்றும் தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றால் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்று முடிந்தது என்பதை இங்கே தெரியப்படுத்துகின்றோம் மேலும் இதில் கலந்துகொண்ட அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.






"பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க பயிற்சி" - திரு. Dr. S.S. பாண்டியராஜன் |20.07.2024, 11 AM

அனைவருக்கும் வணக்கம்-கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு 20.07.2024  காலை 11.00 மணியளவில் தரைத்தளத்தில் அமைந்துள்ள பல்வகை பயன்பாட்டு அரங்கில் முனைவர் எஸ் .எஸ் பாண்டியராஜன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் (தேசிய சதுரங்க நடுவர்) அவர்கள் தலைமையில் பயிற்சி வகுப்பு இனிதே நடைபெற்றது. இப்பயிற்சியில், கல்லூரி மாணவ /மாணவிகள் மற்றும் வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.










"இளையோர் களம்" | 19.07.2024, 4.30 PM

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (19.07.2024) வெள்ளிக்கிழமை  இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டுக்கூடத்தில் இளையோர்கள் மற்றும் மாணவ/மாணவிகளுக்கான "இளையோர் களம்",  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், இளையோர் மற்றும் மாணவ/மாணவிகள் அனைவரும் பங்கேற்று தங்கள் திறமைகளை (சொற்பொழிவு , பரதநாட்டியம், கவிதை, பாடல், நூல் விமர்சனம், விவாத மேடை ) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி



" யாதுமாகி நின்றாய் சக்தி " பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி | 20.07.2024, 5 PM

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இரண்டாம் நிகழ்ச்சியாக சனிக்கிழமை அன்று (20.07.2024) மாலை 5.00 மணிக்கு "மகளிர் மருத்துவம்" என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய திருமதி  DR.M.ஹேமலதா அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மகளிருக்கான மருத்துவம் பற்றியும் உடல் ஆரோக்கியம்  பற்றியும்  வாசகர்களிடம் சிறப்பாக  உரை நிகழ்த்தினார்.







“நூல் அரும்புகள்” - புத்தக விமர்சனம் ( Book review ) | 21.07.2024, 10.30 AM

கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை.   “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி, (21.07.2024 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில்  நடைபெற்றது . இந்நிகழ்வில் குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை  சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து  நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு    பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள்  வழங்கப்பட்டது . பங்குபெற்ற அனைவருக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.










" குழந்தைகளுக்கான பசுமையும் நெகிழியும் " - திரு .ப. ஹரி பாபு -21.07.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (21.07.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு  ப. ஹரி பாபு அவர்களின் "  பசுமையும் நெகிழியும்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு ப. ஹரி பாபு அவர்கள்,மண்ணின் மரபு சார்ந்த மரங்களின் பெயர்கள்  அவற்றின் நன்மைகள் போன்றவற்றை இளைய தலைமுறையினர் உணரும் வகையிலும்,அழிவின் விளிம்பில் உள்ள மரங்களையும் மீட்கவும்,அரிதாகி போன மரங்களை காக்கும் வகையில் ஆலோசைனைகளை வழங்கினார் .மேலும் நெகிழியால் உரினங்களுக்கு  ஏற்படும் பாதிப்புகளையும்  அவற்றை தவிர்க்கும் வழிமுறைகளையும் வழங்கினார்.இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு மரங்களை பாதுகாப்பது குறித்தும் அதன் நன்மைகள் மற்றும் நெகிழியை தவிர்ப்பது குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது  .இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.