Posted by Kalaignar Centenary Library, Madurai on July 24, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (28.07.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு . பு. இரா. விஸ்வநாத் அவர்களின் " அஃறிணை அறிவோம்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு பு. இரா. விஸ்வநாத் அவர்கள்,நாய் மற்றும் பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள் , ஊர்வனம் மற்றும் வீட்டு விலங்குகளோடு இணக்கமாக வாழும் கலை குறித்தும் ,ஊர்வனம் விலங்குகளை துன்புறுத்துவதை தவிர்த்து அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார் . இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு ஊர்வனம் விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அதன் நன்மைகள் குறித்தும் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது .இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events




