" குழந்தைகளுக்கான பசுமையும் நெகிழியும் " - திரு .ப. ஹரி பாபு -21.07.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (21.07.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு ப. ஹரி பாபு அவர்களின் " பசுமையும் நெகிழியும்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு ப. ஹரி பாபு அவர்கள்,மண்ணின் மரபு சார்ந்த மரங்களின் பெயர்கள் அவற்றின் நன்மைகள் போன்றவற்றை இளைய தலைமுறையினர் உணரும் வகையிலும்,அழிவின் விளிம்பில் உள்ள மரங்களையும் மீட்கவும்,அரிதாகி போன மரங்களை காக்கும் வகையில் ஆலோசைனைகளை வழங்கினார் .மேலும் நெகிழியால் உரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அவற்றை தவிர்க்கும் வழிமுறைகளையும் வழங்கினார்.இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு மரங்களை பாதுகாப்பது குறித்தும் அதன் நன்மைகள் மற்றும் நெகிழியை தவிர்ப்பது குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது .இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.