• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 08/11/2024 10 மணி முதல் 1மணி வரை

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியில் இன்று  சி. இ. ஓ. ஏ. பள்ளிக் குழுமத் தலைவர்  திரு. அலசி மை இராசா கிளைமாக்சு அவர்கள் இலக்கண குறிப்பு என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் தமிழ் இலக்கணம் எடுத்துரைத்தார் இதில் ஏராளமான மாணவர்கள் பங்கு பெற்று பயன் அடைந்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்



"The Magician's Elephant " சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 26.10.2024, 4 PM

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (26.10.2024 )சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான "The Magician's Elephant" என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர், அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி ...







“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 27.10.2024 , 10.30 AM

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்   “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி  இன்று (27.10.2024 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில்  நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை  சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து  நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு    பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள்  வழங்கப்பட்டது . 





குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான ஸ்வரங்களில் பாடும் முறைகள் பயிற்சி பட்டறை"- திரு. இசை கலைமணி S. P.பெரியசாமி - 27.10.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் இன்று காலை 11.00 மணிக்கு இசை கலைமணி S. P.பெரியசாமி ,இசை ஆசிரியர் அவர்களின் "சிறுவர்களுக்கான ஸ்வரங்களில் பாடும் முறைகள் பயிற்சி பட்டறை" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திரு.இசை கலைமணி S. P.பெரியசாமி அவர்கள் குழந்தைகளுக்கு ஸ்வரங்கள் மற்றும் அதன் வகைகளை எடுத்து கூறி ஸ்வரங்களின் வழியாக பாடும் முறைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து சில பாடல்களை பாடினார் . விருப்பமுள்ள குழந்தைகளும் மேடைக்கு வந்து பாடிமகிழ்ந்தனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...





KCL Expresso : Intelligence Speaks - "பேச்செனும் பெருந்தெய்வம்"- ஜெ. தீபா நாகராணி-24.10.2024 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு

பொதுநூலக இயக்ககம்கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 24.10.2024 வியாழக்கிழமை அன்றுபேச்செனும்பெருந்தெய்வம் என்ற தலைப்பில்ஜெ.தீபாநாகராணி, அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற 
இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள்தங்கள். 
பெயரினை https://tinyurl.com/4d9642bu லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு    கேட்டுக்கொள்கிறோம்.

ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற உள்ளது - 23.10.2024 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 23.10.2024 புதன்கிழமை மாலை 04.00மணிக்கு ஐந்தாம்  தளத்தில்   ”ஆய்வாளர் அரங்கம்” எனும் நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில் திண்டுக்கல் காந்தி கிராம  பல்கலைக்கழக ஆய்வு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்து விளக்கினார், பல்கலைக்கழக, கல்லூரி ஆய்வு மாணவர்கள் மற்றும் வாசகர்கள் பங்குபெற்று கலந்துரையாடினர்.








இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 20.10.2024" ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் " இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 20.10.2024" ஞாயிற்றுக்கிழமை  அன்று மாலை 5.00  மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்  நினைவலைகள்” என்ற  தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.











குழந்தைகள் நிகழ்ச்சி -"மைக் டெஸ்டிங் ஒன்.. டூ.. த்ரீ.. (சிறுவர்களுக்கான பேச்சுக் கலை பயிற்சி ) "- திரு. கவிஞர். துளிர்-20.10.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (20.10.2024)ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு. கவிஞர். துளிர்  ,ஆசிரியர்  அவர்களின் "மைக் டெஸ்டிங் ஒன்.. டூ.. த்ரீ.. (சிறுவர்களுக்கான பேச்சுக்  கலை பயிற்சி ) " என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது . எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids



"இளையோர் களம்" 18/10/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (18.10.2024) வெள்ளிக்கிழமை  இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டுக்கூடத்தில் "இளையோர் களம்",  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ/மாணவிகள் அனைவரும் பங்கேற்று தங்கள் திறமைகளை (சொற்பொழிவு , நடனம்,இசை, பரதநாட்டியம்) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி










“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 20.10.2024 , 10.30 AM

கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை. குழந்தைகளுக்கான  வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி (20.10.2024 ) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நடைபெறும். நிகழ்ச்சிக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது . அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதை படித்துவிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் பங்குபெறலாம் (ஒரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக 5 சிறார்கள், ஒருவருக்கு ஐந்து நிமிடம்). முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இதில் பங்கு பெறும் சிறார்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். நன்றி...

முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-Kids-Nool-Arumbukal




" Mr. Lemoncello’s Library" சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 19.10.2024, 4 PM"

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (19.10.2024 )சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான "Mr. Lemoncello’s Library" என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர், அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி...






CHESS @ KCL" - சதுரங்க பயிற்சி | சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (19.10.2024 ) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு. உமாசங்கர் அவர்களின் "CHESS @ KCL" என்ற சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சியின்  பதினேழாவது   நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . திரு. உமாசங்கர் அவர்கள் சதுரங்கத்தில்  மிடில் கேம் டெக்னிக் 1. ஆதரிக்கப்படாத துண்டு எப்படி தாக்குவது, 2. தாக்குதலுக்கான ஸ்கொயர் கிளியரன்ஸ். ஆரம்பநிலைக்கு சதுரங்கத்தில் ஒரு யுக்தியை எப்படிப் பயன்படுத்துவது (Middle game technique in chess 1. Unsupported piece how to attack, 2. Square clearence for the attack.  For the beginners how to apply one tactics in chess this is all covered in today chess class.)போன்றவற்றை  இன்றைய சதுரங்க வகுப்பில் மிக தெளிவாக எளிய செயல்விளக்கங்களுடன் சிறுவர்களுக்கு  கற்றுக்கொடுத்தார் . நிகழ்வின் இறுதியில் விருப்பமுள்ள குழந்தைகள் திரு. உமாசங்கர் அவர்களுடன் சதுரங்கம் விளையாடினார்கள் . குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பயன்பெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . நன்றி ...



"கலைப்பட்டறை" 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணி "Calligraphy(Brushpen & Faux Calligraphy)"

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  இன்று 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி அளவில்  "கலைப்பட்டறை " என்னும்  நிகழ்ச்சியில் திருமதி .திவ்யா அன்பரசன் அவர்கள் "Calligraphy(Brushpen & Faux Calligraphy)" பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் இளையோர் பங்குபெற்று எழுத்துக்களை Calligraphy Style ல் எவ்வாறு எழுதுவது  என்பதை ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி.








"நிலவொளியில்" இலக்கியம் மற்றும் அதை சார்ந்த கலந்துரையாடல்கள் 17/10/2024 வியாழக்கிழமை

அனைவருக்கும் வணக்கம்! ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியில் இந்த மாதம் (17/10/2024) தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் வாசகர்கள் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளாகிய கவிதைகள் , கட்டுரைகள், சிறுகதைகள், மேலும் தாங்கள் எழுதிய புத்தகத்தின் உள்ளடக்கங்கள், தாங்கள் வாசித்த புத்தகத்தின் கருத்துக்களையும் எடுத்துரைத்து பிறரையும் வாசிக்கத் தூண்டும் வகையில் உரையாடினர்,. எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த முழு நிலவுக்கும்,  வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.





"யாதுமாகி நின்றாய் சக்தி " - திருமதி சோ.விஜயசாந்தி | 19.10.2024, மாலை 5.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் "யாதுமாகி நின்றாய் சக்தி " எனும் பெண்களுக்கான மாதாந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் சனிக்கிழமை அன்று (19.10.2024) மாலை 5.00 மணிக்கு பல்வகை பயன்பாட்டு அரங்கத்தில் " சட்டமும் மகளிரும் " என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய திருமதி ச.விஜயசாந்தி அவர்களின்  சிறப்பு உரை நடைபெற்றது இதில் மகளிர் சார்ந்த சட்டங்களை பற்றிய தகவல்களை தெளிவாக விளக்கி கூறினார்  என்பதை  மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம்.








KCL Expresso : Intelligence Speaks - Agri -Tourism (வேளாண்மை சுற்றுலா )-MR. A.P. |ARUL JAMES EDWIN THAMBU , Founder & Managing Director,Tamil Nadu Agrotourism Network Corporation Pvt Ltd .| மாலை 5.00 மணி

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 17.10.2024 வியாழக்கிழமை அன்று “Agri -Tourism (வேளாண்மை சுற்றுலா ) என்ற தலைப்பில்,MR. A.P.ARUL JAMES EDWIN THAMBU , Founder & Managing Director,Tamil Nadu Agrotourism Network Corporation Pvt Ltd .  அவர்களின் உரையானது பல்வகைப்  பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு  நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ளுமாறு  அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்.  

For Registration : https://tinyurl.com/mpcsn94w


"ஒரு நாள் கலைவிழா இலக்கியம்-ஓவியம்-நாடகம் " 12.10.2024 சனிக்கிழமை

 அனைவருக்கும் வணக்கம்!

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 12.10.2024 சனிக்கிழமை அன்று "ஒரு நாள் கலைவிழா:இலக்கியம்-ஓவியம்-நாடகம்" என்னும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது . இந்நிகழ்ச்சியில் பகல் 11.00 மணி அளவில் பல்வகைப் பயன்பாட்டு அரங்கில்  "தமிழ்ச் சமூகமும் அவைதீக மரபும் " என்னும் தலைப்பில் முனைவர் "வீ .அரசு" அவர்களுடன் கலந்துரையாடலும் மற்றும்  மாலை 4.00 மணி அளவில் ஓவியர் "ட்ராட்ஸ்கி மருது " அவர்களுடன் "எனது ஓவியங்கள் " என்னும் தலைப்பில் கலந்துரையாடலும்  விளக்கச் செயல்முறையும் நடைபெறவுள்ளது . மேலும் மாலை 6.30 மணி அளவில் மாநாட்டுக்கூடத்தில் "அ.மங்கை " அவர்களின் "ஸ்த்ரீ பர்வம்" என்னும் நாடகம் நடைபெறவுள்ளது . எனவே இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம்.



முத்தமிழ் முற்றம் 16.10.2024 புதன்கிழமை "எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள்" கலந்துரையாடல்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 16.10.2024" புதன்கிழமை மாலை 5.00  மணிக்கு  இரண்டாம் தளத்தில்  "எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள்" என்ற தலைப்பில் அவரது படைப்புகள் பற்றி குழு கலந்துரையாடல் நடைபெற்றது . இதில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்