கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது இந்நூல் www.annacentenarylibrary.org கொள்முதலில் இணையதளத்தில் நூல்கள்பங்கேற்க, "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.