• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் "Happy Kids Hub" (19.04.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம்!

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று   (19/04/2026 ) ஞாயிறு  காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மற்றொரு நிகழ்வாக .இந்நிகழ்வில் செல்வி .சந்தியாஸ்ரீ மற்றும் செல்வி. ஹர்ஷவர்த்தினி (உளவியலாளர்கள்) மெனடோரா பவுண்டேஷன் -மதுரை  அவர்கள் *”Happy Kids Hub”*என்னும் தலைப்பில்

குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்தத் தருணத்தில், 

“Reducing stress and focus learning through fun activities”

 (மகிழ்ச்சியான செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து கற்றலில் கவனத்தை மேம்படுத்துதல்  போன்றவற்றை சிறிய சிறிய செயல்பாடுகளின் மூலம் குழந்தைகளுக்கு விளக்கி உணர வைத்தார் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.  இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..

இந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு:https://www.facebook.com/share/p/1BdjAUfxJs/



யாதுமாகி நின்றாய் சக்தி "மன அழுத்தத்தில் இருந்து மன அமைதிக்கான பயணம், வாருங்கள் தோழிகளே" 18/04/26 சனிக்கிழமை மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம்  !

நமது கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவ து சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில் மன அழுத்தத்தில் இருந்து மன அமைதிக்கான பயணம், வாருங்கள் தோழிகளே ! என்ற தலைப்பில் இன்று 18/04/26 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை செல்வி. சந்தியாஸ்ரீ TRK உளவியலாளர் மெனடோரா பவுண்டேஷன் மதுரை அவர்கள் தனக்கே உரித்தான முறையில் அனைவரிடமும் பேசி அன்றாட நிகழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்கான நான்கு வழி முறைகளை (தவிர்க்கவும் (Avoid), மாற்றவும் (Alter), ஏற்றுக்கொள் (Accept), சூழ்நிலைக்கேற்ப மாற்றுதல் (Adapt) சிறந்த முறையில் பயிற்சி உடன் எடுத்துரைத்தார். வாசகர்கள் தங்களது மன அழுத்தத்தை அரங்கத்தில் பகிர்ந்து அதற்க்கான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு :https://www.facebook.com/share/p/1BAMA6r3J7/


Popular science lecture on " அறிவியல் வழங்கும் வாழ்க்கை விடைகள் ” (17.04.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (17/04/2026) மாலை 5.00 மணியளவில் நடத்திய 34வது   Popular science lecture on "அறிவியல் வழங்கும் வாழ்க்கை விடைகள் ” என்னும் தலைப்பில் திருமிகு  கமலா தியாகராஜன் (அறிவியல் பத்திரிக்கையாளர்) அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் திருமிகு  கமலா தியாகராஜன் அவர்கள்  தமது உரையில்  மன்னர் வளைகுடா  தீவுகளில் உள்ள vaan தீவுகள்  அழிந்து வருவதை பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து கட்டுமானம் மற்றும் சாலை அமைப்பது   குறித்தும், மா மரங்கள் அழிந்து வரும் சூழலில் பழங்கால மா மரங்களில் 300 க்கு மேற்பட்ட புதிய வகையை உருவாக்குவது  (Grafting Method) குறித்தும்  எளிய விளக்கக்காட்சி வாயிலாக எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் பங்குபெற்றவர்களின் கேள்விகளுக்கு சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார் . இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி ...

இந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு: https://www.facebook.com/share/p/1GZ65MenRq/

இந்த நிகழ்ச்சியின் பவர் பாயிண்ட் விளக்க காட்சி :https://docs.google.com/presentation/d/1MKxg3RfAF8wNxX5GXYIG4hDZtpH4OtL1/edit?usp=drive_link&ouid=115774605887371441690&rtpof=true&sd=true


குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கான திரைப்படம்,அபாகஸ் பயிற்சி,சதுரங்க பயிற்சி (18.04.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று 

(18.04.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு " DESICABLE ME" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம்* திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து  மாலை 5.30 மணிக்கு  திருமதி. அ. கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி  அவர்களின் 27வது  "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பும், அதே நேரத்தில்   திருமிகு. M. ராபின் ராஜகாந்தன் அவர்களின்  "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate)  பயிற்சி வகுப்பும்  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.  பங்கு பெற்ற அனைவருக்கும்  நன்றி..

இந்நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு : https://www.facebook.com/share/p/18nXiZZQFK/


சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் " APTITUDE & GENERAL INTELLIGENCE & REASONING" 18/04/ 26 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 வரை

 அனைவருக்கும் வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெற்றுவரும்  "சிகரம் தொடு" எனும் வாராந்திர தொடர் நிகழ்வின் வரிசையில் இன்று ( 18.04.2026 ) சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரை  திருமிகு R. Thukkaisamy (Aptitude Trainer ) , அவர்களின்    "Aptitude & General Intelligence & Reasoning" என்னும் நிகழ்வானது  சிறப்புடன் நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமிகு. R. Thukkaisamy அவர்கள் முக்கிய திறனறிவு, பொது நுண்ணறிவு குறித்து எளிய முறையில் விளக்கக்காட்சி மூலமாக  பயிற்சி அளித்தார் .மேலும்  போட்டித்தேர்வுமாணவர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் .இந்நிகழ்வில் ஏராளமான போட்டித்தேர்வுமாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் , பங்குபெற்ற அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்திக்கொள்கின்றோம்.



சிறுவர்களுக்கான திரைப்படம் "DESPICABLE ME" (18.04.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!,

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை விரிவுபடுத்துகின்ற வாய்ப்பாகவும் , உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும்,குழைந்தைகளுக்கான திரைப்படம் திரையிடுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு அமைகின்றது.அந்த வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறார் திரைப்படங்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த வாரம் (18.04.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "DESPICABLE ME"  என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். அனுமதி இலவசம்!. நன்றி...

முன்பதிவுக்கு :http://tinyurl.com/kcltheatre



"Abacus@KCL" அபாகஸ் தொடர் பயிற்சி 18.04.2026 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில், குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி ஆர்வத்தை உண்டாக்கிடவும், எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையிலும், வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களைக் கொண்டு குழந்தைகளுக்கான  "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில், (18.04.2026) சனிக்கிழமை அன்று மாலை 5.30  மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 27-வது "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஆகவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி...

குறிப்பு :-


1. வயது (age) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்தப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.


3. இந்நிகழ்விற்கு வரும்பொழுது குறிப்பேடு, பென்சில், அழிப்பான் மற்றும் "எண்சட்டக் கருவி" (Abacus Kit) வைத்திருப்பவர்கள் கொண்டுவரவும்.

இந்த வார அபாகஸ் நிகழ்வு முன்பதிவிற்கு :https://tinyurl.com/Abacus-at-KCL