Popular science lecture on " மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள் ” (20.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு

Posted by Elakkiya on March 22, 2026

 அனைவருக்கும் வணக்கம்!,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (20/03/2026) மாலை 5.00 மணியளவில் நடத்திய 32வது   Popular science lecture on "மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள் ” என்னும் தலைப்பில் முனைவர்.கௌரி பிரியா சிதம்பரநாதன்,விஞ்ஞானி,நோயெதிர்ப்பு மற்றும் ஸ்டெம் செல் உயிரியல் துறை ,அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை, மதுரை .,அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் முனைவர்.கௌரி பிரியா  

 அவர்கள் குருத்தணுக்கள்,குருத்தணுக்கள் பிரிவு மற்றும் வேறுபாடு,திறன் அடிப்படையில் குருத்தணுக்களின் வகைகள்,குருத்தணுக்களை அடையாளம் காணல் ,குருத்தணுக்களின் உயர் பெருக்க திறன்,மீளுருவாக்க மருத்துவத்தில் குருத்தணுக்கள்,முதிர்ந்த குருத்தணுக்கள்,Limbal Epithelial Stem Cells குறித்தும் எளிய விளக்கக்காட்சி வாயிலாக எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் பங்குபெற்றவர்களின் கேள்விகளுக்கு சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார் . இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி ...


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு: https://photos.app.goo.gl/xV794hnB3nkmzqEN7

இந்நிகழ்வின் பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி :https://docs.google.com/presentation/d/1n7KydlXoRFYkZFAqQgoo_95awPjzhgPF/edit?usp=sharing&ouid=102497143834574691207&rtpof=true&sd=true