குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் “மதுபானி கலை மற்றும் வண்ணம் தீட்டுதல்” (15.03.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

Posted by Elakkiya on March 17, 2026

 அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று   (15.03.2026 ) ஞாயிறு  காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு.அந்துவன் கபிரியேல் (கலைடாஸ்கோப்) அவர்கள் வழங்கும் “அந்துவனும் ஆதனும்” (வரலாறு சார்ந்த கதையாடல்கள்) எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருமிகு.அந்துவன் கபிரியேல் அவர்கள் வரலாற்றை குழந்தைகளிடம் எடுத்துச்சொல்லும் நோக்கத்தோடு வரலாறு சார்ந்த கதையாடல்கள்  என்கிற தலைப்பில் சிந்து சமவெளி மற்றும் கீழடி நாகரீகம் சார்ந்த வரலாற்று புனைவு கதைகளின் வாயிலாக ஒரு கதையாடல் முன்னெடுக்கப்பட்டது .இந்நிகழ்வானது குழந்தைகளுக்கு வரலாற்று நிகழ்வுகளை புரிந்துகொள்ளும் விதமாக அமைந்தது. இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/17DN5WLQD6/