குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் “மதுபானி கலை மற்றும் வண்ணம் தீட்டுதல்” (08.03.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
அனைவருக்கும் வணக்கம் ,
மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று (08.03.2026 ) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு.அச்சுதன் ரவி,(கலைஞர் & கலை ஆசிரியர்) அவர்கள் வழங்கும் “மதுபானி கலை மற்றும் வண்ணம் தீட்டுதல்” எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருமிகு.அச்சுதன் ரவி அவர்கள், மேற்கத்திய மற்றும் இந்திய நாட்டுப்புறக் ஓவியங்கள் குறித்து அறிமுகம். மதுபானி கலை பற்றிய சுருக்கமான வரலாறு. ஓவியங்கள் வரைவது, வண்ணக் கோட்பாடு மற்றும் அக்ரிலிக் வண்ணங்களைக் கலந்து வைப்பது குறித்து எளிய முறையில் பயிற்சி அளித்தார் இந்நிகழ்வானது குழந்தைகளின் கற்பனை சிந்தனைகளை மெருகேற்றும் விதமாக அமைந்தது. இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..
இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/1CCc4QaQaz
