குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் “எளிய அறிவியல் பரிசோதனைகள்” (01.03.2026 ) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
அனைவருக்கும் வணக்கம் ,
மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று (01.03.2026 ) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு.ச.சரவணப்பாண்டி,(எழுத்தாளர்,கவிஞர், படத்தொகுப்பாளர்)அவர்கள் வழங்கும் “எளிய அறிவியல் பரிசோதனைகள்”எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருமிகு. ச.சரவணப்பாண்டி அவர்கள், பெர்னூலி தத்துவம் , நியூட்டனின் மூன்றாம்விதி , , புவிஈர்ப்பு மையவிசை ,காற்றின் அழுத்தம் ,காற்று மற்றும் ஒளியின் பண்புகள் குறித்தும் , விமானம் இயங்குவதற்கு தேவையான நான்கு விசைகள் குறித்தும் எளிய செயல்முறை விளக்கத்தோடு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் . இந்நிகழ்வானது குழந்தைகளின் அறிவியல் சிந்தனைகளை மெருகேற்றும் விதமாக அமைந்தது. இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..
இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/172ozvqbDv/
