"PUPPET SHOW" (21.12.2025) ஞாயிறு காலை 11.00 மணி

Posted by Sindumathi S on December 16, 2025

அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி நேற்று  (21.12.2025 ) ஞாயிறு  காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 திருமிகு.S.ஆனந்த சொரூப சாந்தி, பேராசிரியர் (ஓய்வு), அவர்கள் வழங்கும்  "PUPPET  SHOW" எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில், பொம்மலாட்டக் கலை மூலம் கதைகள், பாடல்கள் மற்றும் நகைச்சுவையை இணைத்து விலங்குகள் பற்றியும், குறிப்பாக, வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளின் வாழ்வியல் குறித்தும், இயற்கையின் அடிப்படையான ஐம்பூதங்களின் முக்கியத்துவம் குறித்தும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்.இந்நிகழ்வானது குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், அவர்களின் கற்பனை வளங்களையும், நற்சிந்தனைகளையும் வளர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது. இந்நிகழ்வில் திரளாக குழந்தைகளும் மற்றும் பெற்றோர்களுக்கும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு: https://www.facebook.com/share/p/19kgg5iet8/