“நூல் அரும்புகள்” 14.12.2025 ஞாயிறு காலை 10.30 மணி

Posted by Sindumathi S on December 11, 2025

அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று  (14.12.2025 ) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

            மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 திருமிகு.P.ராஜலெட்சுமி மற்றும் திருமிகு. M.வைஷ்ணவி அவர்கள் வழங்கும்  "Mind stimulating activities" எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருமிகு.P.ராஜலெட்சுமி மற்றும் திருமிகு. M.வைஷ்ணவி அவர்கள்,

நினைவக விளையாட்டுகள், நினைவக வினாடி வினா, I Spy" (நான் பார்க்கிறேன், வார்த்தையோடு விளையாடு, பாதி படத்தைப் பயன்படுத்தி ஒரு படத்தை வரையவும்(Draw a Pic), ஒரு பட அட்டையைப் பயன்படுத்தி கதை சொல்லல், வரிசை விளையாட்டு & XO குறுக்கு விளையாட்டு (tic tac toe ), செயலை யூகிக்கவும் (Guess the Action), tongue twister  போன்ற செயல்பாடுகள் மூலம் குழந்தைகளின் அறிவுத்திறனை  மேலும் வளமூட்டும் வகையில் பயிற்சி அளித்தார் .இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...