சிறுவர்களுக்கான திரைப்படம் " NUMERO 9 " சனிக்கிழமை (04.10.2025) மாலை 4.00 மணிக்கு
Posted by Mohanraj Sekar on October 03, 2025
வணக்கம்! மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை விரிவுபடுத்துகின்ற வாய்ப்பாகவும் , உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும் ,குழைந்தைகளுக்கான திரைப்படம் திரையிடுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு அமைகின்றது.அந்த வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறார் திரைப்படங்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திரையிடப்பட்டு வருகின்றது.இந்த வாரம் (04.10.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு " NUMERO 9 " என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி...அனுமதி இலவசம்!
முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.
முன்பதிவுக்கு : http://tinyurl.com/kcltheatre
Categories: Events