" நிலவொளியில் " திங்கட்கிழமை 06/10/25 மாலை 6 மணி முதல் 7 மணி வரை
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியானது இன்று நான்காம் தளத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் வாசக பெருமக்கள் தாங்கள் கற்று உணர்ந்த புத்தகங்கள் பற்றியும் தங்கள் படித்த , படைத்த கவிதைகளையும், இலக்கியங்களையும், கட்டுரைகளையும், கதைகளையும் பகிர்ந்து கொண்டனர் . இதில் கலந்து கொண்ட முழு நிலவு மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள வாசகர்கள், எழுத்தாளர்கள், நூல் விருப்ப நேயர்கள் மற்றும் இதில் கலந்து கொண்ட அயல் நாட்டவர் என அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.







