" கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் " ஞாயிறு (26.10.2025) காலை 11.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on October 17, 2025

வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (26.10.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு. மொ.பாண்டியராஜன்,முனைவர்.கண்ணன், K.உதவிப் பேராசிரியர், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை,அமெரிக்கன் கல்லூரி, மதுரை. திருமிகு.M.சபரீஷ்,உதவிப் பேராசிரியர்,தடயவியல் அறிவியல் துறை,அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை அவர்கள் வழங்கும் "கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம்."எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருமிகு.மொ.பாண்டியராஜன் அவர்கள் Foldscope கருவி மூலம், குழந்தைகளுக்கு தக்காளி மற்றும் வெங்காயத்தின் செல் அமைப்புகள், அவற்றில் காணப்படும் பூஞ்சைகள் மற்றும் பூச்சி இனமான "ஈ" யின் உடலமைப்பு குறித்தும் மிக தெளிவாக விளக்கினார். அதனைத் தொடர்ந்து முனைவர் K. கண்ணன் மற்றும் திருமிகு.M. சபரீஷ் அவர்கள் பாக்டீரியா, அவற்றின் அமைப்பு, முக்கிய வகைகள், பூஞ்சைகள் குறித்து விளக்கப்படங்கள் மூலமாகவும் எலக்ட்ரோ மைக்ரோஸ்கோப் மாதிரிகள் கொண்டும் குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் , பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும் மிக தெளிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்வானது மிக சிறப்பாக அமைந்தது. இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...