உலக எழுத்தறிவு தினம் "வாசிப்பு என்ன செய்யும் " - முனைவர் வே.தினேஷ் குமார் (முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர், கலைஞர் நூற்றாண்டு நூலகம் ) | 08.09.2025 காலை 10.30 மணி
அனைவருக்கும் வணக்கம் !
உலக எழுத்தறிவு தினமான இன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அருளானந்தர் கல்லூரி இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் அருளானந்த கல்லூரி பேராசிரியர்கள் , NSS ஒருங்கிணைப்பாளர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வாசக பெருமக்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இதில் வாசிப்பு என்ன செய்யும் என்ற தலைப்பில் நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர் வே. தினேஷ்குமார் ஐயா அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், வாசிப்பு பழக்கத்தினை எவ்வாறு மேற்கொள்வது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள், வாழ்வின் உச்சங்கள் என பல்வேறு கருத்துக்களை மாணவ மாணவிகளுக்கு மிக ஆழமாகவும் திருத்தமாகவும் எடுத்துரைத்தார் மாணவ மாணவிகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பில் நன்றி.