"சிகரம் தொடு " திங்கள்கிழமை (06/10/2025) காலை 10:00 மணி முதல் 01:00 வரை
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குடிமைப்பணி தேர்வு மாணவர்களுக்கான நிகழ்ச்சியாக நமது சிகரம் தொடு நிகழ்ச்சியில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆறாம் தேதி திங்கள்கிழமை முனைவர். தே. சங்கர சரவணன் , முதல்வர், அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், தமிழ்நாடு அரசு, சென்னை அவர்கள் சில தேர்வுகள் சில கேள்விகள் என்ற தலைப்பில் குடிமைப்பணி தேர்வு மாணவர்களுக்கான தேர்வுகளை எவ்வாறு நுட்பமாக அணுகுவது என்றும் குடிமைப்பணி தேர்வு சம்பந்தப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலும் இணையவழி வழியாக அளிக்க இருக்கின்றார். மாணவர்களுடன் கலந்துரையாடலும் இதில் இடம் பெறுகின்றன இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பில் அழைக்கின்றோம்.
முன் பதிவிற்கு: https://tinyurl.com/Sigaram-thodu