சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான " ”Colourful chemistry in and around home ” -திரு.அருள் கேப்ரியல்,ஆசிரியர்.,அவர்கள் - 17.08.2025 ஞாயிறு காலை 11.00 மணி
வணக்கம் !
மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு திருமிகு.அருள் கேப்ரியேல் அவர்கள் வழங்கும் ”Colourful chemistry in and around home” எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நம் அன்றாட வாழ்விலும், வீட்டிலும் கிடைக்ககூடிய எளிமையான வேதிப்பொருட்களை வைத்து வண்ணங்களை உருவாக்குவது எப்படி என்பது பற்றி குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் இந்தியா தேசிய கொடி, கொடியேற்றம், எரியும் நீர்,ஓடும் நீர், நடக்கும் நீர், காணாமல்போன பொருட்களை கண்டுபிடித்தல் போன்ற வேதியியல் சார்ந்த செயல்முறை விளக்கத்தோடு மிக எளிமையாக குழந்தைகள் அறியும் வண்ணம் நிகழ்வானது மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... நன்றி ...