"அலுவல் சார்ந்த அடிப்படை கணினி பயிற்சி "
Posted by Kalaignar Centenary Library, Madurai on August 02, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அலுவல் சார்ந்த அடிப்படை கணினி பயிற்சி 2.8.2025, சனிக்கிழமை அன்று தொடங்கியது. கணினி அடிப்படை, தட்டச்சு, MS Word, Excel, Powerpoint, Google Suit - Google docs, sheet and presentation, Computer Hardware and Networking, AI tools, OCR, Email, Canva design, Social media ஆகிய தொழில்நுட்பங்களில் மூன்று மாத காலம் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) நடைபெறும் இந்த பயிற்சியில் 38 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். நிகழ்வில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (பொ) திரு.சந்தானகிருஷ்ணன், நூலகர் மற்றும் தகவல் அலுவலர்கள் திரு. ஜெ. ஜெபா ஜோஸ்லின், திருமதி. சரிதா மற்றும் நூலகர்கள் கலந்துகொண்டனர்.
Categories: Events