"எழுத்தாளர் மேடை"
அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "எழுத்தாளர் மேடை" என்னும் நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக 26.07.2025 மாலை 4:30 மணிக்கு இளம் எழுத்தாளர் திரு. க்ரிஷ்பாலா அவர்கள், தமது கவிதை நூலான "மெல்ல செத்து மீண்டு வா" குறித்து நம்முடன் உரையாடினார். “இந்தக் கவிதைகள் அனைத்தும் என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட உணர்வுகளின் பிரதிபலிப்புகள். அவையே என்னை மீண்டும் வாழ தூண்டியவை,” என அவர் உணர்வுபூர்வமாக பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, கவிதைகளையும் கருத்துக்களையும் விரிவாக அறிந்த வாசக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்! வாருங்கள்!

