Abacus @ KCL சனிக்கிழமை (09.08.2025) மாலை 5.30 மணிக்கு
Posted by Mohanraj on July 31, 2025
வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி நடைபெறவுள்ளது. அந்த வகையில் (09.08.2025) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி இனிதே துவங்க உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி ...
குறிப்பு :- 1. வயது (age ) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.
2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்
3.முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் .
முன்பதிவிற்கு https://tinyurl.com/Abacus-at-KCL
Categories: Events