வேர்கள் (அனுபவ பகிர்வு ) 28.06.2025 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு - "சுறுசுறுப்பான முதுமை " என்ற தலைப்பில் கலந்துரையாடல்
Posted by Kalaignar Centenary Library, Madurai on June 09, 2025
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் "வேர்கள்" - அனுபவப் பகிர்வு எனும் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக, வரும் சனிக்கிழமை, 28.06.2025 அன்று காலை 11 மணிக்கு "முதுமையில் ஆரோக்கியம் - 'சுறுசுறுப்பான முதுமை' சாத்தியப்படுத்தும் உடற்பயிற்சிகள்" என்ற தலைப்பில், பிரபல பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் V. கிருஷ்ணகுமார் அவர்கள்சிறப்புரையாற்றவுள்ளார்.இந்நிகழ்வானது தரைத்தளத்தில் அமைந்துள்ள பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதால் மூத்த குடிமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆரோக்கியமான முதுமைக்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி இலவசம்!
Categories: Events