சிகரம்தொடு போட்டித் தேர்வு மாணவர்களின் வழிகாட்டி நிகழ்ச்சி Ms. L. An. Lindhiya IAS அவர்கள் -10.08.2024 சனிக்கிழமை - காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர்வரிசையில் Ms. L. An. Lindhiya IAS அவர்கள் HOW TO CRACKS UPSC என்ற தலைப்பில் யுபிஎஸ்சி தேர்வு மாணவர்களுக்காக எவ்வாறு படிக்க வேண்டும் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் தடை கற்களை எவ்வாறு உடைத்தெறிய வேண்டும் என்ற தனது அனுபவத்தையும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தகுந்த பதில்களையும் கொடுத்து அவர்களை வழி நடத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊட்டினார் இதில் யுபிஎஸ்சி தேர்வு புதிதாக எழுத இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்தார் இதில் போட்டி தேர்வு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் என்பதை மிகவும் மன மகிழ்வுடன் இங்கே தெரியப்படுத்துகின்றோம்.