குடிமை பணித் தேர்வு போட்டியாளர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்வு (Mentorship Program) 11 ஆகஸ்ட் 2024 ( ஞாயிற்றுக்கிழமை) - காலை 10.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குடிமை பணித் தேர்வு போட்டியாளர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்வு (Mentorship Program) நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள ஐந்தாம் தளத்தில் பல்லூடகப் பிரிவில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சென்னையிலிருந்து திரு M. விக்னேஸ்வரன் அவர்கள் (குடிமைப் பணித் தேர்வில் மூன்று முறை நேர்முக தேர்வை எதிர்கொண்டவர்) கலந்து கொண்டு, போட்டித்தேர்வு ஆர்வலர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல் தனது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். குடிமைப்பணி தேர்வு ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டு பயன் அடைந்துள்ளனர் என்பதனை இங்கு தெரியப்படுத்துகின்றோம்.


