குழந்தைகளுக்கான "வேடமிட்டு கதைசொல்லுதல் " - திரு அ. ஷாஜகான் - 11.08.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (11.08.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு அ. ஷாஜகான் அவர்களின் " புனைவேடமிட்டு கதைசொல்லுதல்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திரு அ. ஷாஜகான் அவர்கள், திருவள்ளுவர் வேடமிட்டு திருக்குறள் சொல்லி அதனுடைய பொருள் விளக்கத்தை குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார் . பொருள் உணர்ந்து படிக்கும் எதுவும் மறக்காது. இளம்வயதில் நல்ல பண்புகள் மனதில் பதிந்தால், எதிர்காலம் ஒளிவீசும். திருக்குறளை நன்கு புரிந்துகொண்டால், வாழ்வை எளிதில் வெல்லலாம் என்றார். மேலும் பாரதியார் வேடமிட்டு பாரதியார் பாடல்களை பாடி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.