”கோடைக் கொண்டாட்டம் 2024” (வால் கோமாளியின் கதையாடல் நிகழ்வு) - திரு. வே.சங்கர் ராம் | 29.05.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on May 29, 2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (29.05.2024 ) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் இருபத்தி ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக திரு. வே.சங்கர் ராம் அவர்களின் "வால் கோமாளியின் கதையாடல் நிகழ்வு " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரு. வே.சங்கர் ராம் அவர்கள் கோமாளி வேடம் அணிந்து குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் கூறினார் . இவை குழந்தைகளின் அறிவுத்திறனையும் நன்நடத்தையும் வளர்க்கும் வகையில் அமைந்தது .குழந்தைகளும் இந்நிகழ்வில் ஆர்வமாக கலந்துகொண்டனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events