”கோடைக் கொண்டாட்டம் 2024” (விளையாட்டு கல்வியில் யோகாவின் பங்கு) - திருமதி . பி. விஜயலக்ஷ்மி | 30.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று (30.05.2024 ) நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் முப்பதாவது நாள் நிகழ்ச்சியாக திருமதி . பி. விஜயலக்ஷ்மி அவர்களின் "விளையாட்டு கல்வியில் யோகாவின் பங்கு " நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திருமதி . பி. விஜயலக்ஷ்மி அவர்கள் விளையாட்டு கல்வியில் யோகவின் பயன்பாடு, யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இவை குழந்தைகளின் ஞாபக சக்தியை ஒருனிலை படுத்தவும்,உடலை வளமாக வைத்துக்கொள்ளவும் பயனுள்ளதாக அமைந்தது. குழந்தைகளும் இந்நிகழ்வில் ஆர்வமாக கலந்துகொண்டனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.