”கோடை கொண்டாட்டம் 2024” ( நாடக பயிற்சி) - திரு. பிரபாகரன் | 12.05.2024 முதல் 21.05.2024 வரை

Posted by Kalaignar Centenary Library, Madurai on May 07, 2024

 பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் நடைபெறவிருக்கும்  ”கோடை கொண்டாட்டம் 2024”  நிகழ்வின் ஒருபகுதியாக 12.05.2024 முதல் 21.05.2024 முடிய திரு. பிரபாகரன் அவர்கள் மற்றும் குழுவினரின்      "நாடக பயிற்சி "   நடைபெறவுள்ளது. இப்பயிற்சிப் பட்டறையில் நடிப்பு திறன் குறித்த நுணுக்கங்கள் மற்றும் செயல்விளக்கங்களுடன்  முழுமையான பயிற்சியும்  அளிக்கப்படும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் ஆகவே முன்பதிவு அவசியம்.ஒவ்வொரு பயிற்சியையும் முழுமையாக முடிப்பவர்களுக்கு மட்டும் பயிற்சியின் முடிவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும், பயிற்சியின் இடையில் சேர்வதற்க்கோ, நிற்பதற்க்கோ அனுமதி கிடையாது.   மேலும் இப்பயிற்சி பெற்றவர்கள் உருவாக்கிய நாடகங்களில்   சிறந்த நாடகம்  தேர்வு செய்யப்பட்டு  அவை   31.05.2024 அன்று நூலகத்தில்  நடைபெறும் நிகழ்வில் அரங்கேற்றம் செய்யப்படும் . விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அனுமதி இலவசம்!  நன்றி ..

குறிப்பு :-  வயது (age ) 11 முதல் 18 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.

நாடக பயிற்சி முன்பதிவிற்கு : - https://tinyurl.com/ytnw8b2p





Categories: