தேசிய நூலக வார விழா | 19 நவம்பர் 2023

Posted by Kalaignar Centenary Library, Madurai on November 18, 2023

          லைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா நிகழ்வு 19.11.2023 அன்று மாலை 4 மணியளவில், பொது நூலக இணை இயக்குநர் (ம) கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின்  முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர்.செ.அமுதவல்லி அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.  நூலகத்தின் திரித்துவங்கள் (trinity of library) என அழைக்கப்படும்  புத்தகம், வாசகர் மற்றும்  நூலகர்  என்பவற்றை மையப்படுத்தும் விதமாக எழுத்தாளர்  திரு. ஆத்மார்த்தி அவர்கள் “புத்தகப் பித்து” என்ற தலைப்பிலும், வாசகர் செல்வி. எஸ்.அனீஸ் பாத்திமா அவர்கள் “வாசகர் பார்வையில் நூலகம்” என்ற தலைப்பிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக நூலகர் முனைவர் திரு.சுரேஷ் அவர்கள் “இன்றைய செய்ற்கை நுண்ணறிவு காலத்தில் நூலகத்தின் செயல்பாடு” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.  


















   


Categories: