போட்டித்தேர்வு மாணவர்களுக்கான தலையங்கங்கள் மொழிபெயர்ப்பு சேவை தொடக்கம்

Posted by Kalaignar Centenary Library, Madurai on October 04, 2023

 பொது நூலகங்களில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச நாளிதழ்களின் தலையங்கங்கள் மற்றும் தொடர்புடைய செய்திகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வழங்குவதற்கான தனித்துவமான சேவையை   பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., அவர்கள் 03.10.2023, வியாழன் அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைத்தார்கள்.  200க்கும் மேற்பட்ட போட்டித்தேர்வு ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், பொது நூலக இணை இயக்குநர் திருமதி.செ.அமுதவல்லி அவர்களும், கலைஞர் நூற்றாண்டு நூலக பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.   இந்த சேவையின் மூலம்,  தலையங்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டு  பொது நூலகங்களிலுள்ள  போட்டித்தேர்வுப் பிரிவுகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.












Categories: