Popular science lecture on " அறிவியல் வழங்கும் வாழ்க்கை விடைகள் ” (17.04.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்!,
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (17/04/2026) மாலை 5.00 மணியளவில் நடத்திய 34வது Popular science lecture on "அறிவியல் வழங்கும் வாழ்க்கை விடைகள் ” என்னும் தலைப்பில் திருமிகு கமலா தியாகராஜன் (அறிவியல் பத்திரிக்கையாளர்) அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் திருமிகு கமலா தியாகராஜன் அவர்கள் தமது உரையில் மன்னர் வளைகுடா தீவுகளில் உள்ள vaan தீவுகள் அழிந்து வருவதை பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து கட்டுமானம் மற்றும் சாலை அமைப்பது குறித்தும், மா மரங்கள் அழிந்து வரும் சூழலில் பழங்கால மா மரங்களில் 300 க்கு மேற்பட்ட புதிய வகையை உருவாக்குவது (Grafting Method) குறித்தும் எளிய விளக்கக்காட்சி வாயிலாக எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்வில் பங்குபெற்றவர்களின் கேள்விகளுக்கு சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார் . இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி ...
இந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு: https://www.facebook.com/share/p/1GZ65MenRq/
இந்த நிகழ்ச்சியின் பவர் பாயிண்ட் விளக்க காட்சி :https://docs.google.com/presentation/d/1MKxg3RfAF8wNxX5GXYIG4hDZtpH4OtL1/edit?usp=drive_link&ouid=115774605887371441690&rtpof=true&sd=true
