"Abacus@KCL" அபாகஸ் தொடர் பயிற்சி 18.04.2026 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில், குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும், கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி ஆர்வத்தை உண்டாக்கிடவும், எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையிலும், வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களைக் கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில், (18.04.2026) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி அவர்களின் 27-வது "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஆகவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி முற்றிலும் இலவசம்! நன்றி...
குறிப்பு :-
1. வயது (age) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்தப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
3. இந்நிகழ்விற்கு வரும்பொழுது குறிப்பேடு, பென்சில், அழிப்பான் மற்றும் "எண்சட்டக் கருவி" (Abacus Kit) வைத்திருப்பவர்கள் கொண்டுவரவும்.
இந்த வார அபாகஸ் நிகழ்வு முன்பதிவிற்கு :https://tinyurl.com/Abacus-at-KCL
.jpeg)