குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் "சுதா மூர்த்தி கதைகள் : ஒரு தொகுப்பு" (12.04.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
அனைவருக்கும் வணக்கம் ,
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று (12.04.2026 ) ஞாயிறு காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு
திருமிகு உமையாள் சுப்பிரமணியம் மற்றும் திருமிகு பத்மப்ரியா சுரேஸ் ஆகியோர் எழுத்தாளர் திருமதி சுதா மூர்த்தி அவர்களின் கதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் உடல் பாவனையுடன் சுவாரஸ்யமாக எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகளுக்கு சிறிய கைவினைப் பொருள் (கிராஃப்ட்) செய்வது பற்றி அழகாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.....
இந் நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு:https://www.facebook.com/share/p/1Gkxyu9374/
