Popular science lecture on " மனித விண்வெளிப் பயணத் திட்டம் ” (06.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு

Posted by Elakkiya on March 07, 2026

 அனைவருக்கும் வணக்கம்!,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை, மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (06/03/2026) மாலை 5.00 மணியளவில் நடத்திய 31வது   Popular science lecture on  " மனித விண்வெளி பயணத்திட்டம்..” என்னும் தலைப்பில் முனைவர்.ரா.வெங்கடராமன் ,புகழ்பெற்ற ஓய்வுபெற்ற விஞ்ஞானி மற்றும் முன்னாள் இணை இயக்குநர்(ISRO), சதீஷ் தவான் விண்வெளி மையம்,.ஸ்ரீஹரிகோட்டா. 

அவர்கள்  சிறப்புரையாற்றினார். இவர்  தனது உரையில், இந்தியாவின் கனவுத் திட்டமான 'ககன்யான்' (Gaganyaan) மிஷன் குறித்து மிக விரிவான விளக்கங்களை வழங்கினார். குறிப்பாக, விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு கவசமான 'க்ரூ மாடியூல்' (Crew Module), அவசர காலங்களில் வீரர்களைக் காக்கும் 'க்ரூ எஸ்கேப் சிஸ்டம்' (Crew Escape System), மற்றும் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனைகள் (Integrated Air Drop Test) குறித்து எளிய முறையில் விளக்கினார்.மேலும், விண்வெளி வீரர்களுக்கான சிறப்பு உடைகள், துணை அமைப்புகள், ககன்யான் கட்டுப்பாட்டு மையம் மற்றும் விண்கலத்தை மீட்கும் நடைமுறைகள் (Recovery Plan) குறித்தும் 

எளிய விளக்கக்காட்சி வாயிலாக எடுத்துரைத்தார். அவரது விளக்கங்கள் அனைவருக்கும் புதிய புரிதலை ஏற்படுத்தின. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் அவர் சிறப்பாக விளக்கமளித்தார். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி

 ...

இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு :https://photos.app.goo.gl/Rwi2UW2FG3r3rVH3A