"நமது நலம்" - நாளும் நலம்! நலமே பலம்!" - "பெண்களின் ஹார்மோன் சமநிலைக்கு இயற்கை மருத்துவத்தின் பங்கு" 24.03.2026 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி

Posted by Elakkiya on March 25, 2026

 "நமது நலம்"  நாளும் நலம்! நலமே பலம்! எனும் நிகழ்வு 24.03.2026 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது..


அனைவருக்கும் வணக்கம். மதுரைக்  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நமது நலம்" நாளும் நலம்! நலமே பலம்! - எனும் நிகழ்வு 24.03.2026 செவ்வாய்க் கிழமை மாலை 4.00  மணிக்கு தரைத் தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. "பெண்களின் ஹார்மோன் சமநிலைக்கு இயற்கை மருத்துவத்தின் பங்கு " - எனும் தலைப்பில் மதுரை அரசு  இராஜாஜி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்  M. நாகராணி நாச்சியார் அவர்கள் சிறப்புரையாற்றி வாசகர்களின் கேள்விகளுக்குப்  பதில் அளித்தார். பெருவாரியான வாசகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். நன்றி.