குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் “குழந்தைகளே! உங்கள் விழிகளைக் காக்க விழித்திடுவீர்” (22.03.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

Posted by Elakkiya on March 22, 2026

 அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று   (22.03.2026 ) ஞாயிறு  காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு  Dr.P. Sundaresan, ICMR  Emeritus scientist,

Molecular Genetics, Aravind Medical Research Foundation, Madurai.அவர்கள் வழங்கும் “குழந்தைகளே! உங்கள் விழிகளைக் காக்க விழித்திடுவீர்" எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் விஞ்ஞானி முனைவர் P .சுந்தரேசன்  அவர்கள், பரம்பரை கண் நோய், பார்வை குறைபாடுகள், கண்ணாடி மூலம் சரி செய்வது, பார்வை இழப்பின் முக்கிய காரணங்கள், கண்புரை நோய்,கண்ணில் நீர்  வடிதல், கண்  அழுத்தம்,  நோய் அறிகுறிகளும் பாதுகாப்பும் ,உணவு பழகக்கவழக்கம் குறித்தும் எளிய முறையில் விளக்கக்காட்சி வாயிலாக குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்கள் , மேலும்  குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கும் சிறந்தமுறையில் விளக்கம் அளித்தார் . இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு :https://www.facebook.com/share/p/1CJJJPWMjv/