“இளையோர் களம்” (27/02/2026) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்.
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை (27/02/2026) மாலை 4.30 மணிக்கு இளைஞர்களின் திறமைகளுக்கு களம் அமைத்து கொடுக்கும் விதமாக “இளையோர் களம்” என்ற நிகழ்வானது நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ/ மாணவிகள் உரை, கவிதை மற்றும் இசை என பல கலை வடிவங்களில் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்த இருக்கின்றனர். எனவே, இந்நிகழ்வினை காண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி இலவசம் நன்றி.