CHESS@KCL 2nd CHAMPIONSHIP -2025 "Open Chess Tournament" 29.12.2025 திங்கள்கிழமை காலை 10.00 மணி
அனைவருக்கும் வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் நடைபெற்றுவந்த "Chess@KCL” என்ற வாராந்திர சதுரங்க பயிற்சியில் பங்குபெற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக விடுமுறை கால நிகழ்வாக (29.12.2025) திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு "CHESS@KCL 2nd CHAMPIONSHIP -2025 "Open Chess Tournament என்ற சதுரங்கப்போட்டி நடைபெறவுள்ளது .எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ...
அனுமதி இலவசம் !
குறிப்பு : -
(இப்போட்டிக்கு வரும் குழந்தைகள் வரும்பொழுது நோட்,பேனா ,பென்சில் அழிப்பான் ,சதுரங்க பலகை(chess board) ஆகியவற்றை கொண்டுவரவும்.)
1. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கடந்த ( 22.06.2024) முதல் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு குழந்தைகள் பிரிவில் நடைபெற்றுவந்த “Chess@KCL” என்ற வாராந்திர சதுரங்க பயிற்சியில் பங்குபெற்ற நபர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.மற்ற இடங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு அனுமதி கிடையாது.
2.வயது: 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டும் இப்போட்டியில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள் .
3. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், உடனடி நுழைவுக்கு (Spot Entry )அனுமதி இல்லை. முன்பதிவு நேரம் 27.12.2025 மாலை : 6.00 மணியுடன் நிறைவு பெறும்.
4.இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் முதல் மூன்று ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு (30.12.2025) அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் விழாவில் பரிசுகளும் மற்றும் பங்குபெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
5.இந்நிகழவில் கலந்துகொள்ள வரும் குழந்தைகள் அன்றயதினம் (29.12.2025) மதிய உணவினை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
6. முற்றிலும் இலவசம்! நிபந்தனைக்குப்பட்டது.
சதுரங்கப்போட்டி முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCLTournament
