குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை

Posted by Sindumathi S on December 29, 2025

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி  பட்டறை நிகழ்வாக  (26.12.2025 முதல் 28.12.2025 வரை)  காலை 11.00 மணிக்கு , திருமிகு.A.செய்யது இப்ராஹிம் , Art Teacher -Velammal Vidyalaya Viraganoor (Madurai), அவர்களின்  "Art & Craft" என்ற 3 நாள் பயிற்சிப் பட்டறையில் இன்று (27.12.2025) இரண்டாம் நாள் நிகழ்வாக முப்பரிமாணக் கலை வடிவங்களை (3D Art) மிக எளிமையாகவும், நுணுக்கமாகவும் எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் செய்முறை விளக்கங்களுடன் நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. கற்பனைத் திறனுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபெற்று தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.

இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/1ACHq6oUhe