குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை நிறைவு நாள்

Posted by Sindumathi S on December 30, 2025

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி  பட்டறை நிறைவு நாள் நிகழ்வாக  (26.12.2025 முதல் 29.12.2025 வரை) நடைபெற்ற  1.Foldscope workshop ,2.Art and Craft workshop மற்றும் ,3."CHESS@KCL   2nd CHAMPIONSHIP -2025  "Open Chess Tournament" நிகழ்வுகளானது  இன்று இனிதே முடிந்தது.இந்த நிறைவு நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக திருமிகு. M.கிறிஸ்டோபர் ஞானராஜ் அவர்கள் கலந்து கொண்டார். அவர் சதுரங்கபோட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளையும்,பயிற்சி பட்டறை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து  குழந்தைகளுக்கும்,கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கும்,கலை நிகழ்ச்சி பயிற்றுனர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக வாழ்த்துரையும்  வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களும் குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்த பயிற்றுனர்களைக் கௌரவிக்கும் விதமாகவும், இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த யாதவா கல்லூரி தன்னார்வலர்களுக்கும்  நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் துணை முதன்மை நூலகர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் பங்கு பெற்ற குழந்தைகள்,பெற்றோர்கள், பயிற்சிப் பட்டறை பயிற்றுனர்கள்,கலை நிகழ்ச்சி பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள். 


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/17vNsRNAjM /