"நமது நலம் - நீரிழிவு : கவலை வேண்டாம்; கவனம் போதும்" 16.12.2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on December 07, 2025

 



நமது நலம்: நாளும் நலம்! நலமே பலம்! எனும் நிகழ்வு 16.12.2025 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.

அனைவருக்கும் வணக்கம்.  மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 16.12.2025 அன்று "நமது நலம்: நாளும் நலம்! நலமே பலம்!" என்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் M. நாகராணி நாச்சியார் அவர்கள், "நீரிழிவு: கவலை வேண்டாம்; கவனம் போதும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிப் பொதுமக்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையுடன் விளக்கமளித்தார். இவருடன் பயிற்சி மருத்துவர்கள் ஹரிஹரன், ஹரிபிரசாத், ராஜீவ் மற்றும் ஹரிஆகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு நீரிழிவு தொடர்பான பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடத்தினர். நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றுப் பயன்பெற்ற இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.