"தேசிய நூலக வாரம் (NOV 14th - 20th)" & " Nov 14th குழந்தைகள் தினம்" சிறப்பு நிகழ்ச்சி (14.11.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்றது.

Posted by Mohanraj Sekar on November 14, 2025

 

அனைவருக்கும் வணக்கம் ,

பொது நூலக இயக்ககம்  ,கலைஞர் நூற்றாண்டு நூலகம் -மதுரை ,  "தேசிய நூலக வாரம்  ( NOV 14- 20)" ஒரு பகுதியாகவும்  " Nov-14 குழந்தைகள் தினம்"  சிறப்பு நிகழ்ச்சியாகவும்  (14.11.2025) வெள்ளிக்கிழமை  இன்று காலை   10.00 மணி அளவில் பள்ளி குழந்தைகளின் நூல் விமர்சனம், மேடைப்பேச்சு,கட்டுரை எழுதுதல் மற்றும் கிராமிய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நிகழ்வில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவ/மாணவிகளுக்கும்  பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது..

இந்நிகழ்வில் பங்கு பெற்ற  CEOA பள்ளி,காக்கை பாடினியார் பள்ளி,மறைமலை அடிகளார் பள்ளி,திரு.வி.க பள்ளி, CPS பள்ளி, நாவலர் சோமசுந்தர பாரதியார் பள்ளி,மாநகராட்சி தொடக்க பள்ளி, செனாய் நகர் பள்ளி,சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளி மற்றும் Al-Ameen பள்ளி மாணவ/மாணவிகள் மற்றும் ஆசிரிய  பெருமக்களுக்கும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களுக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். நன்றி..


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/17ZV9pB7yx/