CULTURAL COMPETITION FOR DIFFERENTLY ABLED PERSONS டிசம்பர் 3, 2025 காலை 10.30 மணி

Posted by Sindumathi S on November 27, 2025

 03.12.2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பாத்திமா கல்லூரி இணைந்து நடத்திய "மாற்றுத் திறனாளிகளுக்கான கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள்" நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக எஸ். சுதாமணி, SBI, மேலாளர் அவர்கள் கலந்து கொண்டு போட்டி தேர்வு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார் மற்றும் கால்நடை மருத்துவர் சத்திய பிரபா  அவர்கள் பார்வை மாற்றுத்திறனாளி வாசகர்களுக்கு 50 வெண்கோல்களை நன்கொடையாக  கொடுத்தார்.  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான  நடனம், பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், பல குரல் திறன், பாடல், படம் வரைதல், உடையலங்காரம், களிமண் சிற்பம் செய்தல் போன்ற போட்டிகளில் எண்ணற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.  இவர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை , மதுரை பாத்திமா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜே.அருள்மேரி  அவர்கள் வழங்கினார்கள். மேலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மாற்றுத்திறனாளி பிரிவின் தினசரி வாசகர் குழுவால் "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்ற நாடகம் தமிழாசிரியர்  திரு. மாரிராஜ்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர் வே. தினேஷ் குமார் அவர்கள் மற்றும் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் வெ. சந்தானகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.