காட்சிப்படுத்துதல் கைவினைப் பொருட்கள் ஆரி தையல் வேலைப்பாடு பொருட்கள் நவம்பர் 15,16
அனைவருக்கும் வணக்கம். நமது கலைஞர் நூற்றாண்டு நூலகம் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சிகளான அழகுக் கலை பயிற்சி மற்றும் ஆரி தையல் வேலைப்பாடு பயிற்சி ஆகியவற்றின் வரிசையில் கைவினைப் பொருட்கள் பயிற்சி நடைபெற்றது.பெண்கள் தொழில்முனைவோராகும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் இதில் கற்றுக்கொண்ட கைவினைப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துதல் நிகழ்வு நமது நூலகத்தில் நவம்பர் 15,16 ஆகிய இரு தினங்கள் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


