குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "Colors of the Mind: Art Therapy Session " ஞாயிறு (12.10.2025) காலை 11.00 மணிக்கு

Posted by Mohanraj Sekar on October 08, 2025

வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. அதன்படி (12.10.2025) ஞாயிறு அன்று  காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நடைபெறும். நிகழ்ச்சிக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது . அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதை படித்துவிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் பங்கு பெறலாம் (ஒரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக 5 சிறார்கள், ஒருவருக்கு ஐந்து நிமிடம்). முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இதில் பங்கு பெறும் சிறார்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். அனுமதி இலவசம் ! நன்றி..







Categories: