"Simple Animations in Computer ” எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஞாயிறு (21.09.2025) காலை 11.00 மணிக்கு
வணக்கம் ! மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு திருமிகு M.அசோக் குமார்உதவி பேராசிரியர், மதுரைக் கல்லூரி, மதுரை.,அவர்கள் வழங்கும் "Simple Animation in Computer ” எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருமிகு M.அசோக் குமார் அவர்கள் (Simple shape animation, Changing animation, Motion Animation, Layer Animation, Color Change Animation, Rainfall Animation ) போன்ற பல அனிமேஷனின் அடிப்படைகள், நுட்பங்கள் குறித்தும், மேலும் இவை அனைத்தும் கலந்த வடிவில் எளிய செயல்பாடு மற்றும் விளக்கக்காட்சி அடிப்படையில் மிக தெளிவாகவும், எளிய முறையிலும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...




