குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "Paper Mosaic Art Making and Paper Craft Making" ஞாயிறு (05.10.2025) காலை 11.00 மணிக்கு
வணக்கம் !
மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு திருமிகு.நெ.ராகப்பிரியா,அவர்கள் வழங்கும் "Paper Mosaic Art Making and Paper Craft Making" எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருமிகு.நெ.ராகப்பிரியா அவர்கள் குழந்தைகளுக்குப் பிடித்த மீன்கள், பறவைகள் போன்ற உருவங்களை மோசைக் காகிதங்களின் உதவியுடன் வண்ணமயமாக்கும் முறை குறித்து செய்முறைப் பயிற்சி அடிப்படையில் எளிமையாகவும், தெளிவாகவும் அவர்கள் பயிற்சி அளித்தார்.இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...



