சிறுவர்களுக்கான "குழந்தைகளுக்கான " ”Insect World” - திருமிகு.பொ.இராஜமாணிக்கம்,கல்லூரி இணைப் பேராசிரியர்(ஓய்வு ).,அவர்கள் - 31.08.2025 ஞாயிறு காலை 11.00 மணி
வணக்கம் !
மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு முனைவர்.பொ.ராஜமாணிக்கம், ஓய்வு பெற்ற கல்லூரி இணைப் பேராசிரியர், அவர்கள் வழங்கும் "Insect World ” எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முனைவர்.பொ.ராஜமாணிக்கம் அவர்கள், பூச்சிகளின் அமைப்பு மற்றும் தனித்துவம் (முக்கியமாக அவற்றின் பன்முகத்தன்மை வாய்ந்த வாய் பாகங்கள், இறக்கைகள், ஆண்டெனா, அவை இடும் முட்டைகள்) குறித்து செயல்பாடு மற்றும் விளக்கக்காட்சி அடிப்படையில் குழந்தைகளுக்குப் புரிந்துகொள்ளும் வகையில் மிக அழகாகவும், ஆழமாகவும் எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...