முழு சந்திர கிரகணம் 2025: "Lunar Eclipse: Science of the Blood Moon" வியாழக்கிழமை (04.09.2025) காலை 11.00 மணிக்கு
வணக்கம்! செப்டம்பர் 7, 2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 முதல் செப்டம்பர் 8 அதிகாலை 1.00 மணி வரை நடைபெறவுள்ள சிவப்பு சந்திரகிரகணம்( Blood Moon) இந்த அறிய நிகழ்வின் முன்னோட்டமாக இன்று (04.09.2025) வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து "Lunar Eclipse: Science of the Blood Moon" என்னும் தலைப்பில் முனைவர் S.ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதன், இணை பேராசிரியர் (ஓய்வு ) அமெரிக்கன் கல்லூரி மதுரை, அவர்களின் சிறப்புரையானது சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் S.ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதன் அவர்கள் , நிலா ஏன் அன்று மட்டும் சிவப்பாக தெரிகின்றது என்றும் ,ராலே ஒளிச்சிதறல் ( Rayleigh Scattering ) பற்றியும் ,சூரியன், சந்திரன், நிலா, மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்பொழுது இந்த நிகழ்வு நடைபெறுகின்றது என்றும் ,அதை எப்படிப் பார்ப்பது என்பது குறித்தும் மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற ,ஜெயின் வித்யாலயா பள்ளி ,SEV மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் CEOA பள்ளி மாணவ/மாணவிகள் /ஆசிரியர்கள்,அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . நன்றி ...