"Abacus@KCL" சனிக்கிழமை (23.08.2025) மாலை 5.30 மணிக்கு

Posted by Mohanraj on August 20, 2025

வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும்,  கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி வகுப்பு நடைபெற்றுவருகின்றது . அந்த வகையில் (23.08.2025) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு  திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி  அவர்களின் 3வது  "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும்  இலவசம்! நன்றி ... 


குறிப்பு :-  1. வயது (age) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.
                    2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் 
                    3.இந்நிகழ்விற்கு வரும்பொழுது  குறிப்பேடு ,பென்சில் ,அழிப்பான் மற்றும் "எண்சட்டக் கருவி"(Abacus Kit) வைத்திருப்பவர்கள் கொண்டுவரவும். 

முன்பதிவிற்கு  https://tinyurl.com/Abacus-at-KCL


Categories: